வில்லியர்ஸ் விடை பெறுகிறார்!

 


தென்னாபிரிக்கா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஏபிடி வில்லியர்ஸ் ஓய்வை அறிவித்துள்ளார்.


அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்தார்.

உலக கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்கிறார் தென்னாப்பிரிக்காவின் 360 டிகிரி ஏபி டி வில்லியர்ஸ்.

இவர் இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,765 ஓட்டங்களை குவித்துள்ளார்.

228 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,577 ஓட்டங்களை குவித்துள்ள அவர் 78 டி20 போட்டிகளில் விளையாடி 1,672 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

மேலும், ஐபிஎல் போட்டித் தொடரில் ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த டி வில்லியர்ஸ் 5,162 ஓட்டங்களை குவித்திருக்கிறார்.

மேலும் நான் விளையாட்டை முழு மகிழ்ச்சியுடனும், கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும் விளையாடினேன். இப்போது, ​​37 வயதில், அந்தச் சுடர் அவ்வளவு பிரகாசமாக எரிவதில்லை என பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.