மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

 


காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ டியன்சின் கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 3 சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இந்த கைது சம்பவம் நேற்று (18) மாலை வேளையில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரம், மின்சாரத்திற்கு தேவையான வயர் சுருள்கள் மற்றும் நீர் வெளியேற்றும் குழாய்கள் என்பன கைபற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் பொகவந்தலாவ டியன்சின், பொகவந்தலாவ தோட்டம், பொகவந்தலாவ கெம்பியன் ஆகிய தோட்டப் பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் 23ம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸாரினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

-நிருபர் சதீஸ்குமார்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.