பெண்ணின் சடலம் தொடர்பில் இருவர் கைது!

 


பயணப் பொதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கணவன், மனைவி இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சபுகஸ்கந்த மாபிம எண்ணெய் சுத்திகரிப்ப வளாகத்திற்கு அருகில் வீதியில் குப்பைகள் கொட்டுமிடம் ஒன்றில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் (04) கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சடலம் கை கால்கள் கட்டப்பட்டு பயணப்பொதியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.