விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் மாட்டிய கேரள கஞ்சா!


கொழும்பு - கெசல்வத்தையில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது பல ஆபத்தான பொருட்கள் சிக்கியுள்ளனர்.

இந்த சுற்றிபெருந்தொகை கஞ்சா மற்றும் 7 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றுடன் 8 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

75.5 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 3 சந்தேகநபர்களும், 3 கிராம் ஹெரோயின் மற்றும் 6 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் மேலும் 5 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் , சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 7 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு – 12, கொழும்பு – 15 ஆகிய பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட சந்தேகநபர்கள் 8 பேரும் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.