தலதா மாளிகையைப் படம் எடுத்தவர் கைது!!

 


தலதா மாளிகை வளாக பகுதிகளை ட்ரோன் கமரா கொண்டு காணொளி எடுத்த பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக தலதா மாளிகை பொலிஸார் தெரிவித்தனர்.

தலதா மாளிகை வளாகத்தில் அனுமதியின்றி ட்ரோன் கமரா பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நபரை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தனது யூ ரியூப் அலைவரிசைக்காக அந்த காணொளிகளை எடுத்ததகவும் பங்களாதேஷ் பிரஜை பொலிஸ் விசாரணைகளில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரின் ட்ரோன் கமரா, தொலைபேசி, கடவுச் சீட்டு உள்ளிட்டவற்றை பொறுப்பேற்றுள்ள பொலிசார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்கவின் ஆலோசனைக்கு அமைய,சுற்றுலா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இத்தமல்கொட தலைமையிலான பொலிசார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.