அபின் கொண்டு சென்ற வியாபாரி கைது

 


பொலன்னறுவை இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு தனியார் பஸ் வண்டியில் அபின் போதைப் பொருளை வியாபாரத்துக்காக எடுத்துச் சென்ற ஒருவரை காத்தான்குடியில் வைத்து நேற்று (14) இரவு கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 100 மில்லி கிராம் அபின் போதைப் பொருளை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


காத்தான்குடி பிரதேசத்தில் சனிக்கிழமை சிறியளவிலான அபின் போதைப் பொருளுடன் இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கதுருவெல முஸ்லீம் கொலனியை சேர்ந்த வியாபாரி ஒருவர் அபின் போதைப் பொருளை வழங்கிவருவதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து காத்தான்குடி ரெலிக்கோம் சந்தி பஸ்தரிப்பு நிலையத்தில் பெரும் குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி வை. விஜயராஜா தலைமையிலான பொலிஸார் சம்பவதினமான நேற்று இரவு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கொழும்பு அக்கரைப்பற்று பஸ் வண்டியில் இருந்து இறங்கிய நபரை மடக்கிபிடித்து சோதனையிட்டபோது அவரிடமிருந்து 100 மில்லி கிராம் அபின் போதை பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.