மீனவர்கள் 23 பேரையும் விடுதலை

 


தமிழக மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதனை அடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் ஓரிரு நாட்களில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் 23 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடற்படையினர் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதவான் மீனவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை அறிவித்து அதனை ஓராண்டுக்கு ஒத்தி வைத்து நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும் மீனவர்கள் பயன்படுத்திய 2 படகுகளும் அதில் இருந்த மீன்பிடி உபகரணங்களும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் கொழும்பில் உள்ள மிரிஹான முகாமில் தங்க வைக்கப்பட்டு ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

-நிருபர் பிரதீபன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.