மரநடுகை மாதத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகரிலும் அயலவர் பூங்காவிற்கு ஆப்பிள் மரம் அன்பளிப்பு

மரநடுகை கார்த்திகை மாதத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகர் பேர்லினில் Grunewald பிரதேசத்தில் அமைந்துள்ள அயலவர் பூங்காவிற்கு ஈழத்தமிழர்கள் சார்பாக ஆப்பிள் மரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

தமிழர்களின் வாழ்வியலில் கார்த்திகை ஒரு புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. வீடுகள்தோறும் விளக்கேற்றி வழிபடும் திருநாள் இம்மாதத்திலேயே அடங்குகிறது. மழைத்தண்ணீரால் நனையும் மாதமாக மாத்திரம் அல்லாமல் தமிழ்மக்களின் கண்ணீரால் நனையும் மாதமாகவும் கார்த்திகை உள்ளது.அந்தவகையில் இந்த  புனித வாரத்தில்  மரநடுகை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. 


மரங்களை வணங்குகின்ற தொன்மையான வழிபாட்டைக்கொண்ட நாங்கள் மரணித்தவர்களின் நினைவாக மரங்களை நாட்டி வைக்கும் மாண்பையும் கொண்டிருக்கிறோம். இவற்றின் அடிப்படையிலேயே  கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனம் செய்து ஆளுக்கொரு மரம் நடுவோம். நாளுக்கொரு  வரம் பெறுவோம் என்ற மகுட வாசகத்துடன் கடந்த பல  ஆண்டுகளாக   எமது உறவுகள் தாயகத்தில் கடைப்பிடித்து வருகின்றார்கள்.


 

குறிகிய காலத்தில் இவ் நிகழ்வில் ஏனைய மக்களையும் இணைத்து ஒழுங்குபடுத்த முடியாத காரணத்தால் பேர்லின் தமிழ் மக்களின் சார்பாக ஒரு சிலரே கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.