யேர்மனி மத்திய மாநிலத்தில் நடைபெறவுள்ள மாவீர்ர் நாள் தொடர்பான அவசர அறிவித்தல்!!

 


வணக்கம் ,அன்பார்ந்த யேர்மனி வாழ் மக்களே,

மத்திய மாநிலத்தில் நடைபெறவுள்ள மாவீர்ர் நாள் தொடர்பான அவசர அறிவித்தல்.


Schwelm  நகர மண்டபத்தில் ஏற்பாடு   செய்யப்பட்டு இருந்த மாவீர்ர் நாள் நிகழ்வு , அந் நகரத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக , அந் நகர சுகாதார அமைப்பால் மண்டப அனுமதி  இன்று மதியம் மறுக்கப்பட்டதால் , மாவீர்ர்களுக்கான வணக்க நிகழ்வுகள் மட்டும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.  


Hünefeld str.63b

42285 Wuppertal 


எனும் முகவரியில் நாளை 13 மணிக்கு மாவீர்ர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகும். மத்திய மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட இடத்தில் மாவீர்ர்களுக்கு மலர்தூவி , சுடர்வணக்கம் செய்ய ஒழுங்குகள் மேற்கொண்டு உள்ளோம். நாளை வருகை தரும் பொதுமக்கள் அனைவரும் வணக்கம் செலுத்த வசதியாக சுழற்சிமுறையில் மண்டபத்தினுள் அனுமதிக்கப்படுவார்கள். எனவே மத்திய மாநில மாவீர்ர் நாளுக்கு வர இருக்கும் மக்கள் அனைவருக்கும் இத் தகவலை உடனடியாக தெரிவிக்கும்படி கேட்டிக்கொள்கின்றோம்.


2G கொரொனா கட்டுப்பாடுகளுக்கு அமைவாக மக்கள் மண்டபத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.


1. கொரொனா தொற்று ஏற்பட்டு 6 மாதங்களுக்குட்பட்ட அத்தாட்சி கடிதம்.


2. 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு 14 நாட்கள் கடந்த அத்தாட்சி கடிதம்


இவற்றில் ஒன்று இருப்பவர்கள் மட்டுமே மண்டபத்தினுள் அனுமதிக்கப்படுவர்.


நன்றி!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.