வெளியானது 'டான்' பர்ஸ்ட் லுக்!!




சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் பெஸ்ற்லுக் போஸ்டரை
 படக்  குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை அச்சத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் துவங்கியது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் 'டான்' படத்திற்கான பூஜை போடப்பட்டு, முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்தப்படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபிச்சக்கரவர்த்தி இயக்குகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர். பிரியங்கா அருள்மோகன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் புகழ், ஷிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடேக்சன்ஸ் தயாரித்து வருகிறது.


அண்மையில் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆக்ராவில் துவங்கி நடைபெற்றது. அங்கு தாஜ்மகாலில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிக்கும் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் அண்மையில் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்தது. பூஜை போட்டு டப்பிங் பணிகளை படக்குழுவினர் துவங்கினர். அதனை தொடர்ந்து இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.