டெல்லி புல்ஸ் அணிக்கான வெற்றி பாதையை அமைத்தார் ரஹ்மானுல்லா குர்பாஸ்!


ரி-10 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், டெல்லி புல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று (வியரிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி புல்ஸ் அணியும் நோர்தன் வோரியஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி புல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நோர்தன் வோரியஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரொவ்மன் பவல் 56 ஓட்டங்களையும் ரொஸ் வைட்லீ 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெல்லி புல்ஸ் அணியின் பந்துவீச்சில், ஷிராஸ் ஹமட் 2 விக்கெட்டுகளையும் பசால் ஹக், டோமினிக் ட்ரேக்ஸ், அடில் ராஷித் மற்றும் ரொமாறியோ செப்பர்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 129 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி புல்ஸ் அணி, 9.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், டெல்லி புல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரஹ்மானுல்லா குர்பாஸ் 70 ஓட்டங்களையும் லுக் ரைட் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நோர்தன் வோரியஸ் அணியின் பந்துவீச்சில், ரெயாட் எம்ரிட் மற்றும் உமைர் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 32 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரஹ்மானுல்லா குர்பாஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.