சண்டை விலக்கச் சென்றவர் பரிதாப பலி!


வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் , சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் திபாவளி தினமான நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அயல் குடும்பத்திற்கு, தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட கைகலப்பை விலளக்குவதற்கு சென்ற தாயே இவ்வாறு பொல்லால் அடிப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி வயது 57 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதோடு ஹட்டன் நீதிமன்றத்தின் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து ஹட்டன் கைரேகை அடையாள பிரிவு மற்றும் வட்டவளை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைதான சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.