வித்தியாசமான முறையில் குழந்தை பெற்ற பெண் எம்.பி!


நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரசவ வலியோடு சைக்கிளில் சென்று குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர் (Julie Anne Gender). 41 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே வைத்தியசாலை இருப்பதால் அவர் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு புறப்பட்டார். அங்கு சென்ற 10 நிமிடத்திலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் தாயும், சேயும் தற்போதும் நலமாக உள்ளனர்.

இதேவேளை பிரசவ வலியோடு சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்தது குறித்து ஜூலி (Julie Anne Gender), முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில் “முக்கியமான செய்தி , இன்று அதிகாலை 3.04 மணியளவில் எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம். பிரசவத்தின்போது சைக்கிளை ஓட்ட உண்மையிலேயே நான் திட்டமிடவில்லை.

ஆனால், அப்படி நடந்து முடிந்துவிட்டது. ஆச்சரியப்படும் விதமாக இப்போது எங்களிடம் நல்ல ஆரோக்கியமான, மகிழ்ச்சியான குழந்தை உள்ளது. அவளின் தந்தையை போலவே” என ஜூலி (Julie Anne Gender) குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்து, 2006ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியேறிய ஜூலி (Julie Anne Gender), இதற்கு முன்னர் கடந்த 2018ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்திருந்தமை இங்கு குறிப்பிட்டத்தக்கது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.