உணவகத்தின் மாடிப்படியில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு!
நீர்கொழும்பு பிரதான வீதியிலுள்ள உணவகம் ஒன்றின் பிரதான சமையல்காரர் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உணவகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக உணவகத்தின் நிர்வாகம் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விருந்து முடிந்து நான்காவது மாடியில் உள்ள தனது அறைக்கு செல்ல முயன்ற போது, மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் வெலிமட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
.jpeg
)





கருத்துகள் இல்லை