அஜித் தோவல் தலைமையில் ஒன்றுகூடல்!!

 


தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி மற்றும் அதிகாரத்தை, தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். தலிபான் அமைப்பின் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில், தற்காலிக அரசும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த அரசு பதவி ஏற்காமல் இருக்கிறது. தலிபான் ஆட்சி அமைந்துள்ளதால் ஆப்கன் மக்கள் கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையே கடந்த முறை போல் அல்லாமல் பெண்களுக்கு உரிய உரிமைகள் நிலைநாட்டப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.



இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பாக விவாதிப்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாாாமாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் மறுப்பு தெரிவித்தன. இதனை தொடர்ந்து, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெரனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது:
இந்த கூட்டத்தை நடத்துவது இந்தியாவிற்கு கிடைத்த பெருமை. ஆப்கனில் நடக்கும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது அந்நாட்டு மக்களை மட்டும் அல்லாமல், இந்த பிராந்தியம் மற்றும் அண்டை நாடுகளையும் பாதிக்கும். இந்த நேரத்தில் நமக்கு இடையே ஆலோசனை, ஒத்துழைப்பு, கருத்து பரிமாற்றம் ஆகியவை முக்கியம். நமது ஆலோசனை ஆக்கப்பூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும், ஆப்கன் மக்களுக்கும் உதவும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.