மதுப்பிரியர்களுக்கான அதிர்ச்சி அறிவிப்பு!!
180 மில்லி லீற்றர் மதுபான போத்தல்களை தடை செய்வதறகான சுற்றாடல் அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
பாவனைக்கு பின்னர் சிறியளவிலான இந்த மதுபான போத்தல்கள் பெருமளவில் சுற்றுசூழலுக்குள் வீசப்படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 10 கோடிக்கும் அதிகமான போத்தல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேபோன்று பயன்படுத்தப்பட்ட போத்தல்களில் நூறு வீதம் சுற்றுசூழலுக்குள்ளேயே வீசப்பட்டுள்ளது. மேலும் குறித்த போத்தல்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் இந்த போத்தல்கள் சேகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவது இல்லை என்பது தெரியவந்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை