சம்பந்தனின் திட்டம் - செல்வத்திற்கு ஆப்பு!!

 


இலங்கை தமிழ் அரசு கட்சி, (ITAK) தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் ஒன்றாக சந்திப்பதற்கான அழைப்பை விடுக்கவுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் சிறுபான்மையின கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர்.

அந்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், (Mano Ganesan)  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அனைத்தின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சி மாத்திரம் கலந்து கொள்ளவில்லை. பொதுவாக, இப்படியான சந்திப்புக்கள், பிற கட்சியின் ஏற்பாடு என்றால் அதில் கலந்து கொள்வதை இரா.சம்பந்தன் (R.Sampanthan) தரப்பு அனுமதிப்பதில்லை. இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஏற்பாட்டில் நடக்கும் சந்திப்புக்களில் பிற கட்சிகள் கலந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பார்ப்பார்கள்.  

இந்நிலையில், யாழ்.சந்திப்பிற்கு தமிழ் அரசு கட்சி கலந்து கொள்ளாதது குறித்து, மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

மேலும், அடுத்து வரும் சந்திப்புக்களில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து, இரா.சம்பந்தன் புதிய திட்டமொன்றை வகுத்துள்ளார். ரெலோவின் ஏற்பாட்டில் நடக்கும் சந்திப்பில் கலந்து கொள்ளாமல், புதிய சந்திப்பொன்றை தமிழ் அரசு கட்சியே ஒழுங்கமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சந்திப்பு ரெலோவின் ஏற்பாட்டிற்கு மாற்றான சந்திப்பு என்ற தோற்றம் உருவாகாமல் இருக்க, புதிய அரசியலமைப்பு பற்றிய விளக்கமும் இடம்பெறும், சுமந்திரனின் அமெரிக்க கலந்துரையாடல்கள் பற்றிய விளக்கமும் அளிக்கப்படும் என்ற தோரணையில்ஒழுங்கமைக்கப்படுகிறது.

சம்பந்தன் சிறந்த அரசியல் வாதி மற்றவர்கள் முன்னிலை ஆவதை ஒரு போதும் அனுமதித்ததில்லை, எனவே செல்வத்தின் நிலை அரசியலில் கவலைக்கிடம் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

அண்மையில் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ர துணைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஊடக செவ்வி ஒன்றில் குறிப்பிட்டார் தமிழரசுக் கட்சியில் மேட்டுக் குடி அரசியல் தற்போது முன்னகர்வதாக, மேற்குறிப்பிட்ட சம்பவமும் அதன் ஒரு வெளிப்பாடா என அரசியல் ஆய்வாளர்கள் வினவுகின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.