மீண்டும் ஆரம்பமானது கொழும்பு- கண்டி ரயில் சேவை!!


 நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு - கண்டி ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர (Dhammika Jayasundara) தெரிவித்துள்ளார்.

குறித்த சேவையானது நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

சீரற்ற காலநிலையால் ரம்புக்கனை - பலான ரயில் நிலையம் வரை தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.