தன்முனைக் கவிதைகள்!!


மெள்ள மெள்ளத்

தொலைந்து வரும் மனிதம்
கண்ணில் இரக்கமின்றிக்
கடந்து போகும் ஏதிலிகள்.

*****

சொகுசுப் பயணத்தில்
எசமானருடன் வளர்ப்பு நாய்
தொலைந்த பழம் நினைவுகளில்
முதியோர் இல்லத்தில் தாய்

*****

புதையல் தேடும் பிள்ளைகள்
வெளிநாட்டு வேலை வாய்ப்பில்
புதையலான பெற்றோர்கள்
ஆதரவற்ற தனிமையில்

*****

பழமையைப் போற்றுவோம் எனப்
மேடை தோறும் முழங்கியோன்
ஓசையின்றிச் சேர்த்துவிட்டான்
முதியோர் இல்லத்தில் பெற்றோரை

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.