கிளிநொச்சியில் விபத்து - இருவர் காயம்!!

 


கிளிநொச்சி டிப்போ சந்தியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



பரந்தன் திசையிலிருந்து கிளிநொச்சி நகருக்குள் பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மற்றும் காருடன் மோதியுள்ளது.

இதன்போது விபத்தில் சிக்குண்ட இருவர் காயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.



சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.