சிறுவர் காப்பகத்தில் 36 சிறுமிகளுக்கு கொரோனா!

 


குளியாப்பிட்டி நீதிமன்றத்தின் கீழ் செயற்படும் சிறுவர் காப்பகத்தில் 36 சிறுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரிகள் இன்று (23) குறித்த வளாகத்திற்குச் சென்று கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட 46 சிறுமிகளுக்கு என்டிஜன் சோதனைகளை மேற்கொண்டதில் மேற்படி சிறுமிகளுக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய சிறுமிகள் மற்றும் அங்குப் பணியாற்றுபவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சிறுவர் காப்பகத்தில் எவ்வாறு கொரோனா வைரஸ் பரவியது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.