அதிகாரங்கள் கமலா ஹரிஸிடம் கையளிப்பு!


 அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அதிகாரங்கள் தற்காலிகமாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது வருடாந்த மருத்துவ சோதனைகளை மேற்கொள்வதற்காக இன்று சென்றுள்ள நிலையிலேயே இவ்வாறு அதிகாரங்கள் தற்காலிகமாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்டுள்ளன.


ஜோ பைடன் தனது 79 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள நிலையில் குறித்த மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு அமெரிக்க இராணுவம் மற்றும் அணுவாயுதங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் கமலா ஹாரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.