பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றப்பட்டது!

 


பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் தண்டனைகளை விரைவுபடுத்துவதற்கும், கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு அவசர சட்டம் பாகிஸ்தானில் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் மற்றும் விரைவான விசாரணைகளுக்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க இந்த சட்டம் வகை செய்கிறது.

இந்த அவசர சட்டத்திற்கு பிரதமர் இம்ரான் கான் (Imran Khan)  ஒப்புதல் அளித்து ஓராண்டுக்கு பிறகு, லோக்சபாவில் இது குறித்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் என்பது பிரதமர் இம்ரான் கானால் உருவாக்கப்பட்டு முன்மொழியப்பட்ட விதிமுறைகள் ஆகும்.

இதன் மூலம் ஒரு நபர் தனது வாழ்நாளில் எந்த காலகட்டத்திலும் உடலுறவு கொள்ள முடியாத நிலைக்கு ஆளாக்கப்படுவார் எனவும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவுடன் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாத்-இ-இஸ்லாமி உறுப்பினர் முஷ்டாக் அகமது தெரிவித்ததாவது,

இந்த சட்டம் இஸ்லாத்திற்கு எதிரானது. பாலியல் பலாத்காரம் செய்தவரை பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும். ஆனால், ஷரியாவில் ஆண்மை நீக்கம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என அவர் தெரிவித்தார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.