உன்னதம் - கவிதை!!
வானம் அழுதுகொண்டிருக்கிறது
வெள்ளிக் கம்பிகளை
பூமிக்கு அனுப்பி
இரங்கல் உரை எழுதியபடி...
மொட்டை குச்சிகளின் மீது
ஈரச்சாக்குகளை
போர்த்தியது போல
கனக்கிறது மனம்...
அடர் நேசத்தின்
பேருன்னதம்
உயிர்க்கொடை...
மீட்பின் சாயலாய்....
கால நதியில்
நினைவுகள் கரைபுரண்டாலும்
கனதிகள்
ஒருபோதும் குறைவதில்லை.
மகோன்னதங்களுக்கு
ஒப்பனை தேவையில்லை
புளுதியில் விழுந்தாலும்
பொக்கிஷங்கள்
வண்ணமிழப்பதில்லையே....
கோபிகை
கருத்துகள் இல்லை