அரசாங்கம் நினைவு கூரும் நிகழ்வுகளை தடுத்தால் மக்கள் வீறு கொண்டு எழுவார்கள் – செல்வம்!

 


போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த மாதம் கார்த்திகை மாதம் என்பதனால் நீதிமன்ற தடை உத்தரவுகளை வீடு வீடாக சென்று ஒவ்வொருவருக்கும் பொலிஸார் கொடுத்து வருகின்றனர்.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. போர் மௌனித்துவிட்டது, போரில் தனது இனம், மண்ணுக்காக மரணித்தவர்களை நினைவு  கூருவதற்கான வாய்ப்புக்களை இன்று அரசாங்கம்  தடுக்கின்றது.

இவ்வாறு தடுப்பதன் மூலம் எதனை நீங்கள் சாதிக்கபோகின்றீர்கள்?“ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.