வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

 


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தின் கீழ் உள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டங்கள் 8 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

இதன்போது 26 உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள் மாத்திரம் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 3 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் 3 உறுப்பினர்களும், சுயேட்சை ஒரு உறுப்பினருமாக 15 பேர் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் சபைக்கு பிரசன்னமாகியிருக்கவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.