மாதவிடாயும் பெண்களும் - ஆன்மீகம்!!

 


பெண் பிள்ளைகளாக பிறந்தாலே 10 வயதிற்கு மேல் அவர்கள் எப்பொழுதும் பெரிய பிள்ளைகளாகும் தருணம் வரப்போகிறது என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விடுவார்கள். அந்த நேரங்களில் பெண் பிள்ளைகளை வீட்டில் இருப்பவர்கள் கவனமாக கண்காணித்து வருவார்கள். 

இதுவரை சிறு பிள்ளைகளாக இருந்த இந்த குழந்தைகள் திடீரென பூப்படைவது என்பது அவர்களுக்கே புரியாத ஒரு விஷயமாக இருக்கும். எனவே இப்படி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வரும் மாறுபாட்டை அவர்கள் அறிவதற்கு சில காலங்கள் எடுக்கும். இப்படி பெண்களின் மாதவிடாய் பற்றி பலவித கருத்துக்கள் இன்று வரையிலும் பேசப்படுகிறது. ஆனால் புராணங்களின் படி இந்த மாதவிடாய்க்கான சரியான காரணம் என்ன என்பதைப் பற்றியும், இந்த நேரத்தில் பெண்கள் ஆன்மீக விஷயங்களில் எப்படி ஈடுபட வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


சிவன் பார்வதி ஆகிய இருவரும் கணவன் மனைவியாவர். இதில் சிவன் உலக மக்களை கண்காணித்து வருவதற்காக பூலோகம் சென்று தனது பணியை செய்ய ஆரம்பித்தார். அவர் திரும்பி வருவதற்கு நேரம் தாமதம் ஆனதால் வாசலில் காத்திருந்த பார்வதி தேவி தன்னையும் மீறி உறக்கம் வந்ததால் நிலை வாசல் கதவை லேசாக சாத்தி தனது கையை தலைக்கு வைத்து உறங்கி விட்டார். - Advertisement - திரும்பி வந்த சிவன் கதவு மூடி இருப்பதை பார்த்து அதனை திறக்க முயற்சி செய்தார். முதலில் அவர் சாதாரணமாக தனது கைகளை வைத்து கதவை திறக்க முயற்சி செய்தார். ஆனால் கதவு திறக்கவில்லை. பிறகு கொஞ்சம் பலமாக திறக்க ஆரம்பித் தார். அப்பொழுதும் கதவு திறக்கவில்லை. பிறகு தனது முழு சக்தியையும் பயன்படுத்தி கதவை திறக்க முயற்சி செய்தாலும் அந்த கதவு சற்றும் அசையாமல் இருந்தது. பின்னர் தனது ஞான திருஷ்டியால் கதவிற்கு உட்புறம் என்ன நடக்கிறது என்று அறிந்துகொண்டார். அப்போதுதான் பார்வதிதேவி உறங்கிக் கொண்டிருப்பதையும் அவரது கட்டை விரல் கதவை லேசாக அழுத்தி இருப்பதையும் அவர் அறிந்து கொண்டார். அவர் மனதில் பல கேள்விகள் எழ ஆரம்பித்தது. உடனே கதவை பலமாக தட்ட ஆரம்பித்தார். பிறகு பார்வதி தேவி கதவைத் திறந்து அவரை உள்ளே அழைத்துச் சென்றார். 

ஆனால் சிவபெருமானுக்கு உறக்கம் வரவில்லை மறுநாள் விடிந்ததும் பிரம்மன் மற்றும் விஷ்ணுவிடம் கலந்து ஆலோசித்து பெண்களுக்கு இயற்கையாகவே இவ்வளவு பலம் இருக்கிறது. இதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும் என்று ஆலோசித்து அதன் பின்னரே பெண்களின் மாதவிடாய் காலமாக அவர்களுக்கு பலம் அதிகமாக இருக்கும் குறிப்பிட்ட காலத்தை நிர்ணயம் செய்தார்கள். எனவேதான் பத்து வயதிற்கு மேல் மற்றும் 50 வயது வரை இந்த மாதவிடாய் பெண்களுக்கு இருக்கிறது. ஆனால் இதுபோன்ற காலங்களில் சில வழிமுறைகளையும் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தார்கள். தனியாக உறங்குவது, தனியாக சாப்பிடுவது என்று பல சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் அவை எல்லாம் மறைந்து அறிவியல் பூர்வமாக அது உடல் ரீதியாக நடக்கும் ஒரு செயல் என்று இப்போது நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. 

அறிவியல் பூர்வமாகவும் பெண்கள் மாதவிடாய் இல்லாமல் இருந்தால் ஆண்களை விடவும் மிகவும் பலம் பொருந்தியவர்களாக இருப்பார்கள் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பொழுதும் ஆன்மீகத்தின் படி இந்த மாதவிடாய் காலம் தீட்டு என்று பார்க்கப்படுகிறது. அதிலும் பத்து வயது முதல் திருமணமாகி குழந்தை பிறப்பதற்கு முன்வரை கன்னி தீட்டு என்று பார்க்கப்படுகிறது. இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணமாகும். முதல் குழந்தை, இரண்டாவது குழந்தை, மூன்றாவது குழந்தை பிறந்த பிறகு இந்த தீட்டு கணக்கில் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் கோவிலுக்கு செல்லும் போது பெண்கள் மாதவிடாயின் 5 நாள் கழித்து செல்வது என்பது மிகவும் சிறந்தது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.