முதுகுக்குப் பின்னால் நரிகள்...!!


முதுகுக்குப் பின்னால் நரிகள்!

முழுவதும் நனைந்ததால் அகத்தில் வலிகள்!

முகத்தில் புன்னகையின் சிதறல்!

இதயத்தில் வன்மத்தின் கதறல்!

தனக்குள் அதிகாரத்தின் ஆசை

செய்திடுவார்! 

தந்திர வேலை

பின்னி சொல்வார் தத்துவம்!

கொஞ்சம் அசந்தால் தீட்டுவார் சூட்சுமம்!

பொதுநலவேலைக்குள் நுழைவார்!

பொசுக்கென்று பொச்செரிப்பில் சுழல்வார்!

பொதுக்குழுவுக்குள் இணைவார்

பொல்லாங்கு பேசி வில்லங்கம் விதைப்பார்!

இனவிடுதலை மனதில் சுமப்பார்!

பணமுதலை கண்டதும் இரண்டகம் செய்வார்!

சினேகபலம் கொண்டவராய் நடிப்பார்!

சினவர் தோள்மீது கை போட்டு நடப்பார்!

அழுத்தத்தை கொடுப்போமென

இழுத்திழுத்து சுழுக்கெடுப்பார்!

ஒன்றாய் ஒரு தட்டில் கைநனைத்து மகிழ்வார்!

ஒட்டி உறவாடி தாலி கட்டியவளை கூட்டிக்கொடுப்பார்!

ஒட்டுரிமை நேசத்தில் வீட்டுக்குள் புகுந்து சிரிப்பார்!

ஒழிவுசெய்து ஒய்யாரமாய் ஓடியே போவார்!

ஏன் இந்த இழி நிலை என கேட்டால் நானில்லையென அகல்வார்!

நயவஞ்சகம் நாரிக்கு

பின்னால் நடக்கு என்பார்!

-தூயவன்-

நோர்வே

29.12,2021

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.