தேன்மதுர கவியாலே என் மண்ணின் வீரம் உரைப்பேன்!!


 மனதோடு நிழலாடும்

கலையாத நினைவோடு
வலி தரும் கவியொன்றை
உரமாகப் படிக்க வேண்டும்
வேய்ங்குழலின் நாதமாக
தாய் மொழியை காதலித்ததால்
கழுமரம் ஏற்றப்பட்ட பாவியவள் நானென்பேன்
புனிதமான பூமியில்
மீண்டும் பிறப்பெடுத்து
குறுநிலம் ஒன்றின் குதிரைப்படைக்கு தளபதியாவேன்
அபிமன்யுவின் சக்கர வியூகங்கள்
பல தகர்த்து
குருதி சிந்தப்பட்டுக் கிடக்கும் தரிசு நிலத்தினை
பல்லாயிரம் ரோஜாக்கள் கொண்டு அலங்கரிப்பேன்
பாதாள சிறைகளில் வாழும் கைதிகளின் கரங்களை விடுவிப்பேன்
பலர் கண்ணீரை என் கரம் கொண்டு துடைப்பேன்
கவினுறும் தமிழோடு
தேன்மதுர கவியாலே என் மண்ணின் வீரம் உரைப்பேன்
ஒரு முனிவனைப்போல் தவமிருந்து
சாகாவரம் வேண்டி
என் மண் மொழி இனம் காத்திடுவேன்
என்னை கொன்றொழிக்க
காலனவன் குறுக்கே வந்தாலும்
தயங்காமல் கைது செய்து
சிறைச்சேதம் செய்திடுவேன்.
💕பிரபாஅன்பு💕

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.