டிசம்பர் 4 வரவுள்ள சூரிய கிரகணம்!!

 


இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 4 ஆம் திகதி அன்று உலகம் காணும். இது உலகின் பல பகுதிகளில் இருந்து தெரியும். இது முழுமையான சூரிய கிரகணமாக இருக்கும். இது காலை 10.59 மணிக்கு தொடங்கி மாலை 3:07 மணிக்கு முடிவடையும்.

இதேவேளை, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் நகரும் போது, ​​அதன் மூலம் பூமியில் நிழல் படுகிறது. அப்போது ​​சூரிய கிரகணம் ஏற்படுகிறது. கிரகணத்தின் போது, ​​சூரியனின் ஒளி சில பகுதிகளில் ஓரளவு அல்லது முழுமையாகத் தடுக்கப்படும். இது முழு சூரிய கிரகணமாக இருக்கும் போது, ​​சூரியன், சந்திரன் மற்றும் பூமி நேர் கோட்டில் காணப்படும்.

மேலும் இந்த சூரிய கிரகணமானது இந்தியாவில் தெரியாது என தெரிவித்துள்ளார். குறித்த சூரிய கிரகணம் அண்டார்டிகா, தென்னாப்பிரிக்கா, அட்லாண்டிக்கின் தெற்கு பகுதிகள், ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் தெரியும்.

இதேவேளை இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்றாலும், அண்டார்டிகாவின் யூனியன் பனிப்பாறையிலிருந்து வான நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வு யூடியூப் மற்றும் nasa.gov/live இல் காண்பிக்கப்படும். சூரிய கிரகணத்தின் போது சூரியனை நேரடியாகப் பார்க்க வேண்டாம் என்று நாசா எச்சரித்துள்ளது.

மேலும் இந்தியா அண்மையில் ஒரு பகுதி சந்திர கிரகணத்தை கண்டது 2021ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 19ஆம் திகதி நிகழ்ந்தது. வடகிழக்கு இந்தியாவில் மட்டும் மிகக் குறுகிய காலத்திற்குத் இது தெரிந்தது. இது ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமாக இருந்ததோடு ஒரு பகுதி சந்திர கிரகணமாகவும் இருந்தது.     

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.