யாழ்தேவி - முச்சக்கரவண்டி விபத்து!!

 


வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் புகையிரதம், ஓட்டோ விபத்துக்கு உள்ளானதில், முச்சக்கரவண்டி சேதமடைந்த நிலையில் , முச்சக்கரவண்டி சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.

குறித்த விபத்து, இன்றுக் காலை 10 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம் ரயிவே கடவையில், இடம்பெற்றுள்ளது. ஓமந்தை பகுதியில் இருந்து தாண்டிக்குளம் புகையிரதக்கடவையால் கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி , தண்டவாளப்பகுதியில் சென்றபோது இயந்திரக்கோளாற்றினால் நின்றுள்ளது.

இதன்போது கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்த யாழ்.தேவி, குறித்த ஓட்டோவை மோதித்தள்ளியது. எனினும் முச்சக்கரவண்டியிலிருந்து சாரதி, கீழே பாய்ந்து தப்பியோடியமையால், உயிர்த்தப்பினார்.

மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ​பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.