ஓய்வுக்காக கேரளா செல்லவுள்ள விஜய்!!
விஜய்யின் பீஸ்ட் படம் முழுவதுமாக முடிந்துவிட்டது என்றும், 36 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது என்றும், மாறிமாறி கூறிவருகின்றனர். ஆனால் உண்மை அது அல்ல, பீஸ்ட் படத்தில், விஜய்யின் போர்ஷன் முழுவதுமாக முடிந்து விட்டது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இன்னும் ஒரு வாரம் மட்டுமே பாக்கி இருக்கிறது. அதன்பின் எடிட்டிங் ஒர்க் எல்லாம் நடைபெறும் என்று கூறுகின்றனர். பீஸ்ட் படத்தை முடித்த விஜய் அடுத்த படத்திற்கு இன்னும் இரண்டு மாத காலங்கள் ஓய்வு இருப்பதால் கேரளா செல்ல திட்டமிட்டுள்ளார். வழக்கமாக ஓய்வு இருக்கும் காலத்தில், லண்டனில் உள்ள மாமனார் வீட்டிற்குத்தான் விஜய் செல்வார்.
ஆனால் இம்முறை ஓய்விற்காக கேரளா சென்று விட்டு வரலாம் என்று முடிவெடுத்துள்ளார். விஜய் கேரளா செல்வதற்கு முக்கியமான காரணம் அங்குள்ள ஆயுர்வேத மசாஜ். அங்கே சென்று விட்டு வந்தால் மீண்டும் புதுப்பொலிவுடன், விஜய் 66 படத்தில் செயல்படலாம் என்ற திட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
விக்ரம், சிம்பு போன்ற ஹீரோக்கள் கூட படம் முடிந்தவுடன் ஓய்வு இருக்கும் நேரத்தில் கேரளாவில் உள்ள ஆயுர்வேத மசாஜ் செய்யும் இடத்திற்கு சென்று மீண்டும் ஒரு புது புத்துணர்ச்சியோடு வருவார்கள்.
இம்முறை, இது விஜய் டைம் அவரும் கேரளா செல்ல திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். எது எப்படியோ விஜய் 66ல் ஒரு புதிய இளைய தளபதி விஜய்யை பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை