காலையும் மாலையும் மட்டக்களப்பில் இரண்டு ஆணையாளர்கள் பதவியேற்பு!!
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக ஒரே நாளில் காலையிலும் மாலையிலும் இரு ஆணையாளர்கள் சம்பிரதாயப்பூர்வமாக இன்று(புதன்கிழமை) தமது பதவிகளை பொறுப்பேற்று கொண்டதையடுத்து ஒரே நாளில் இருவர் ஒரே பதவிக்கான கடமையை பெறுப்பேற்ற வரலாற்று சாதனை இடம்பெற்றுள்ளது.
மாநகரசபை ஆணையாளராக் கடமையாற்றி வந்துள்ள எம்.தயாபரனுக்கு பதிலாக புதிய ஆணையாளராக பொறியியலாளர் ந.சிவலிங்கம் ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டு அவர் இன்று காலையில் தனது கடமைகளை சம்பிரதாயப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனையடுத்து பிற்பகல் புதிய ஆணையாளராக கடமைகளை பொறுப்பேற்ற பொறியியலாளர் ந.சிவலிங்கத்துக்கு பதிலாக மீண்டும் முன்னாள் ஆணையாளர் எம்.தயாபரன் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டு அவர் தமது கடமையை பெறுப்பேற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக எம்.தயாரான் நியமிக்கப்பட்டு இரண்டு வருடங்களாக கடமையாற்றி வருகின்றார். இந்த நிலையில் மாநகரசபை முதல்வருக்கும் மாநகரசபை ஆணையாளர் தயாபரனுக்கும் இடையே மாநகரசபை செயற்பாட்டில் முரண்பாடு ஏற்பட்டது.
இதணையடுத்து ஆணையாளருக்கு சபையினால் வழங்கப்பட்ட அதிகாரங்களை பல சபையினால் மீளப்பெறப்பட்டது. அதனை தொடர்ந்து முதல்வருக்கும் ஆணையாளருக்கும் இடையே தொடர்ந்து முறுகல் நிலையையடுத்து ஆணையாளருக்கு எதிராக மாநகரசபை முதல்வர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் ஆணையாளருக்கு எதிராக நீதிமன்றம் இடைகால உத்தரவு வழங்கியிருந்தது.
தொடர்ந்து ஆணையாளர் நீதிமன்ற தடை உத்தரவை மீறி செயற்படுவதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை மாநகரசபை முதல்வர் மட்டக்களப்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிவந்த பொறியியலாளர் ந.சிவலிங்கம் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டதையடுத்து அவர் இன்று மாநகரசபை முதல்வர் ரி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன மற்றும் பிரதி ஆணையாளர் உ. சிவராயா மற்றும் மாநகரசபை உறுப்பினர் முன்பாக தமது கடமையை பெறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் பிற்பகல் புதிய ஆணையாளராக பதவி ஏற்றுக் கொண்டவருக்கு பதிலாக மீண்டும் ஆணையாளராக எம்.தயாபரனை கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டதையடுத்து அவர் தனது கடமையை பெறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை