வன்முறையில் ஈடுப்பட்ட மூவர் சிக்கினர்!

 


யாழ்.மானிப்பாயில் வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூன்று ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் கடந்த புதன்கிழமை (15-12-2021) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த தாக்குதலை மேற்கொண்ட நவாலி மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த 20, 22 வயதான ரௌடிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இதேவேளை வீட்டுக்குள் புகுந்த கும்பல் பெறுமதியான பொருள்களை சேதப்படுத்தியதுடன் பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.