தயிர் தாளிப்பு சுண்டல்!!

 


தேவையான பொருட்கள்:


1. முளைகட்டிய கொண்டைக்கடலை – 1 கப்

2. முளைகட்டிய பச்சைப் பயறு – 1 கப்

3. பொடியாக நறுக்கிய பேபிகார்ன் – 1 கப்

4. கேரட் துருவல் – 1 கப்

5. மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

6. இஞ்சி – சிறிதளவு

7. கடுகு – 1 தேக்கரண்டி

8. கறிவேப்பிலை - சிறிது

9. மல்லித்தழை – சிறிது

10. எண்ணெய் – தேவையான அளவு

11. உப்பு – தேவையான அளவு

12. புளிப்பில்லாத தயிர் – 200 மி.லி

செய்முறை:

1. முளைகட்டிய பயறு, கொண்டைக்கடலையை வேக வைக்கவும்.

2. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, இஞ்சி தாளித்து, கேரட் துருவலைச் சேர்க்கவும்.

3. பின்னர் அதனைத் தயிரில் சேர்த்து, அதனுடன் உப்பு சேர்த்து வேக வைத்த பயறு, கொண்டைக்கடலை, வதக்கிய பேபிகார்ன், மிளகுத்தூள் சேர்த்து 30 நிமிடம் வரை அப்படியே வைக்கவும்.

4. கடைசியாக அதன் மேலாக மல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறலாம்.

குறிப்பு: சிறு குழுந்தைகளுக்கு இந்தத் தயிர் தாளிப்பு சுண்டல் பிடிக்கும். சிறிது சர்க்கரை சேர்த்தும் கலந்து கொடுக்கலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.