நேபாளத் தீபாவளி - குறுந்தகவல்!!

 


நேபாளத்தில் தீபாவளித் திருநாளை ‘திஹார்’ என்று அழைப்பார்கள். அங்கு தீபாவளி பண்டிகை ஏறக்குறைய ஐந்து நாட்களுக்கு கடைப்பிடிக்கப்படுகின்றது. நேபாளத்தைச் சேர்ந்த இந்துக்களும் பௌத்தர்களும் இந்நாளை களிப்போடுக் கொண்டாடி மகிழ்வர்.


நேபாளத்தில் தீபாவளியின் முதல் நாள் காக் திஹார் என்றழைக்கப்படுகின்றது. இந்நாளன்று, நேபாள இந்துக்கள் காக்கைகளுக்கு உணவளிப்பர். காக்கைகள் மிகவும் புத்திசாலித்தனமான பறவைகள். அவை மனிதர்களின் முகங்களை நினைவு கொள்ளும் திறனுடையவை. அவை தமக்கு உணவளித்தவர்களை நெடுநாட்களுக்கு நினைவில் கொள்ளும். மேலும் காக்கைகள் பகிர்ந்து உண்ணும் பண்புடையவை. காக்கைகளுக்கு உணவளிப்பதால், மனிதர்களும் எப்போதும் நன்றி மறவா நற்குணத்தோடும் பகிர்ந்து உண்ணும் பண்போடும் வாழவேண்டும் என்ற நன்னெறி புகட்டப்படுகின்றது.

நேபாளத்தில் தீபாவளியின் இரண்டாவது நாள் குகுர் திஹார் என்றழைக்கப்படுகின்றது. இந்நாள் பெரும்பாலான மக்களிடையே மகத்தான வரவேற்புமிக்க ஒரு நன்னாளாக அமைந்துள்ளது. இந்நாளன்று நாய்களின் சேவைகளுக்கும் அவற்றின் விசுவாசமிக்க குணத்திற்கும் நன்றி செலுத்தப்படுகின்றது. நாய்களுக்கு மாலைகள் அணிவித்து, திலகமிட்டு, உணவுகள் அளிக்கப்படுகின்றன. மனிதர்களாகிய நாம் நன்றி விசுவாசத்தை நாய்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.

மூன்றாவது நாள் காய் திஹார் என்றழைக்கப்படுகின்றது. இந்நாளில் பசுக்களுக்கு நன்றி செலுத்தப்படுகின்றது. மனிதர்கள் பசுக்களிடம் இருந்து பாலை பெற்றுக் கொண்டு, நன்றிக்கடனாக பசுக்களுக்குப் பாதுகாப்பைத் தருகின்றனர். சாதுவான குணத்திற்கும் தியாக உணர்விற்கும் எடுத்துக்காட்டாகப் பசு திகழ்கின்றது. மனிதர்கள் பசுக்களிடம் இருந்து இந்த நல்ல குணங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என நேபாள மக்கள் நம்புகின்றனர்.

தீபாவளி கொண்டாட்டம் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் வெவ்வேறு விதமாக கொண்டாடப்பட்டாலும், இருளைப் போக்கி ஒளியை ஏற்றும் அருமை மிக்க தத்துவத்தை உணர்த்தும் திருநாளாகத்தான் அமைந்துள்ளது. பொருளுடைய நம் பண்டிகைகளை நாம் பொருள் மாறாதுக் கொண்டாடி வாழ்வில் வளம் பெறுவோம்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.