இந்தியருக்கு வெள்ளை மாளிகையில் மற்றுமொரு உயர்பதவி!


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் (Joe Biden), இந்திய அமெரிக்கரான கவுதம் ராகவனை  ( Gautam Raghavan)வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவர் பதவிக்கு உயர்த்தியுள்ளார்.

தற்போது அப் பதவியில் உள்ள கேத்தி ரஸ்ஸல் என்பவர், யுனிசெப்பின் அடுத்த நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டதை அடுத்து அந்த இடத்திற்கு கவுதம் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அமெரிக்கரான கவுதம் ராகவன் இந்தியாவில் பிறந்தவர் ஆவார். சியாட்டிலில் வளர்ந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார்.

இந்நிலையில் கவுதம் ராகவன் ஜனாதிபதியின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி பணியாளர் அலுவலகத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், மக்கள் உரிமைகள் மற்றும் சமூக நீதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் அமைப்புகளுக்கு ஆலோசனையும் வழங்கி வந்தார், பிடன் அறக்கட்டளையின் ஆலோசகராகவும் துணைத் தலைவராகவும் கவுதம் ராகவன் பணியாற்றியுள்ளார்.

இதேவேளை ஜோபைடன் அரசாங்கத்தில் துணைஜனாதிபதியாக உள்ள கமலாஹாரிஸ் இந்தியவழ்சாவழியை சேர்ந்த தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.