கொழும்பில் களமிறக்கப்பட்டுள்ள அதிகாரிகள்!


எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு நகரிலுள்ள உணவு விற்பனை நிலையங்களில் கொழும்பு மாநகர சபை பாதுகாப்பு பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரியான வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

கொழும்பு வடக்கு, மத்திய கொழும்பு, பொரளை, கொழும்பு கிழக்கு மற்றும் கொழும்பு மேற்கு ஆகிய பகுதிகளிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் பொதுச் சுகாதார பரிசோத கர்கள் அடங்கிய ஆறு குழுக்கள் இந்த பாதுகாப்பு பரிசோதனை களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு நகரிலுள்ள அனைத்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற உணவு விற்பனை நிலையங்கள் உணவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இவ்வாறு பரிசோதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதோடு உணவுச் சட்டத்தை மீறும் உணவு விற்பனை நிலையங் கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் பொது மக்கள் இது தொடர்பில் 011 267 6161 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் தெரிவித்த அவர், அதிகாரிகள் 30 முதல் 45 நிமிடங்க ளுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.