யாழில் வீடுடைத்து பாரிய நகை திருட்டு!


யாழ்ப்பாண மாவட்டம் சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீடு ஒன்றை உடைத்து 14 பவுண் நகை திருப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (06) யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானை - நிற்சாமம், சிலம்பு புளியடி ஆலயத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் உரிமையாளர்கள் மு.ப 10 மணிக்கு கொண்டாட்டம் ஒன்றிற்கு சென்றுவிட்டு, நேற்று பி.ப. 5 மணிக்கு வீட்டிற்கு வந்து வீட்டினை அவதானித்தனர். இதன்போது கதவு உடைத்து நகை திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸார் சந்தேக நபரைத்தேடி வலைவீசி வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.