புறோக்கரால் நின்றுபோன திருமணம்!


யாழில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நிலையில் இருந்த 21 வயதான யுவதியை திருமணம் செய்யும் ஆசையில் இருந்த சுவிஸ் வாழ்.ஈழத்தமிழரின் கனவில் மண்ணைப் போட்ட புறோக்கரை ஆள் வைத்து அடித்துள்ளார்.

இச்சம்பவம் யாழ்.வலிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சுவிஸில் வசிக்கும் 32 வயதான யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நிலையில் இருந்த 21 வயதான யுவதியை திருமணம் செய்துகொள்ள ஆசையாக இருந்துள்ளார். இதன்போது புறோக்கர் ஒருவர் இந்த திருமணத்தை நிறுத்தியதால் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கால் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கொட்டனால் தாக்கப்பட்ட நிலையில் புறோக்கர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இருப்பினும் இச்சம்பவம் தொடர்பில் முழு விபரம் இதுவரையில் தெரியவரவில்லை.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.