மூங்கிலாறு சிறுமி கொலை விவகாரம் - சகோதரியின் கணவர் கைது!!

 


முல்லைத்தீவு மூங்கிலாறில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் சிறுமியின் மூத்த சகோதரியின் கணவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மூங்கிலா றில் உயிரிழந்த சிறுமி நிதர்சனா, திருகோணமலையில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த நிலையில் கடந்த 7ஆம் மாதம் மூங்கிலாற்றிற்கு வந்திருந்த நிலையில் மீண்டும் ஜனவரியில் திருகோணமலைக்கு கல்வி நடவடிக்கைக்கு செல்வதாக இருந்தது.

இந்நிலையில் சிறுமி காணாமல்போனதாக பொலிசில் முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையி சிறுமியின் உடல் மீட்கப்பட்டிருந்தது. சட்டவிரோத கருக்கலைப்பால் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்தமை மரண அறிக்கையில் தெரியவந்திருந்தது.

பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு, அவரது மூத்த சகோதரியின் கணவரான 34 வயதான அத்தானே காரணமென்பது விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியின் மூத்த சகோதரியான 20 வயதான பெண், கடந்த மாதமளவிலேயே குழந்தை பிரசவித்திருந்தார்.

அவரது கணவனான 34 வயதானவர் ஏற்கனவே திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ள நிலையில் உயிரிழந்த சிறுமியின் சகோதரியை திருமணம் முடித்துள்ளார்.

கொரோனா காரணமாக பாடசாலை விடுமுறை காலத்தில் சிறுமி வீட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில், குறித்த நபரால் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, கர்ப்பமாக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.    

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.