அகற்றப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலையின் ஆய்வகம்!!
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தை அகற்ற சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள சுற்றறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பரவி வரும் பல்வேறு வகையான கொரோனா வைரஸ்களை அடையாளம் காணும் ஆய்வகமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வகம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை