இலங்கையில் ஒமிக்ரோன் முதலாவது தொற்றாளர் அடையாளம்!

 


இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.