நுரையீரலுக்குள் அதிவேகமாக செல்லும் ஓமிக்ரோன்!


டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஓமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹொங்கொங் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட Omicron வைரஸ் இலங்கை, பிரித்தானியா, இந்தியா, கனடா, ஜேர்மனி உள்ளடங்களாக பல்வேறு நாடுகளில் பரவி வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டெல்டா வகை கொரோனா வைரஸினை விட ஓமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது எனவும், டெல்டாவை விட மிகவும் குறைவான உடல் பாதிப்பையே Omicron ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதிவேகமாக நுரையீரலுக்குள் செல்லும் ஓமிர்ரோன் வைரஸ் டெல்டாவை விட மிக குறைவான அளவில் நுரையீரல்களை தாக்கும் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.