இன்று முதல் மீண்டும் ஊரடங்கை அறிவித்த பிரபல நாடு!


கொரோனா தொற்று காரணமாக கடந்த 2019 முதல் உலகம் முழுவதும் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால், பல நாடுகள் பொது சுகாதாரத்தை மேம்படுத்த, விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற தொடங்கியுள்ளன.

குறிப்பாக, பொது இடங்களில் கூடுவதுவதற்கு தடை, முகக்கவசம் அணிவது கட்டாயம், கொரோனா தடுப்பூசி செலுத்துதல் என தீவிரமாக கட்டுப்பாடுகளையும், விதிகளையும் கடைபிடித்து வருகின்றன. கொரோனா தொற்றால் பல உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதனால், எதிர்பாராத வகையில் உறவுகளை இழந்து மக்கள் தவிக்கின்றனர். 

தற்போது, கொரோனா பரவலை உலக நாடுகள் கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து சில தளர்வுகளை அமல்படுத்திவரும் நிலையில், கொரோனாவின் திரிபான ஓமிக்ரோன் அதி வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகள் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தயாராகி வருகின்றன.

அதுமட்டுமல்லாது, டிசம்பர் மாத இறுதில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்ட்டாட்டங்கள் காரணமாக இந்த ஓமிக்ரோன் பரவல் அதிகமாகிவிடுமோ என்ற அச்சம் உலக நாடுகளுக்கு பெரிதாக உள்ளது.

இந்நிலையில், நெதர்லாந்து நாட்டில் Omicron பரவலை கட்டுப்படுத்த, இன்று முதல் ஜனவரி 14 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து, அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது நாட்டில் கொரோனா மற்றும் ஓமிக்ரோன் வைரஸ் நினைத்ததை விட வேகமாக பரவி வருவதாகவும், எனவே நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு காரணமாக இன்று முதல் ஜனவரி 14 வரை அனைத்து அத்தியாவசியமற்ற கடைகள், உணவகங்கள், பார்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும் என்றும், பள்ளிகளும் குறைந்தது ஜனவரி 9 வரை மூடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தைத் தவிர, மற்ற நாட்களில் மக்கள் தங்கள் வீட்டில் விருந்தினர்களை எண்ணிக்கை குறைத்துக்கொள்ள மார்க் ரூட்டே மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.