5 000 ரோஜாக்களில் கிறிஸ்துமஸ் தாத்தா!!
இந்தியாவில், கிறிஸ்துமஸையொட்டி ஒரு பிரமாண்டமான மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளார் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.
அவர் கிறிஸ்துமஸ் தாத்தா வடிவத்தில் உருவாக்கிய மணற்சிற்பத்தின் நீளம் 15 மீட்டர்; அகலம் 8.53 மீட்டர்.திரு. சுதர்சன் ஒரிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் அந்த மணற்சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தாத்தாவின் மணற்சிற்பத்தைச் செய்வதற்கு சுமார் 5,400 ரோஜாக்கள் பயன்படுத்தப்பட்டன.
மணற்சிற்பத்தில் "Merry Christmas, Enjoy your Christmas with COVID guidelines" எனும் வார்த்தைகளும் குறிப்பிடப்பட்டன.
தாத்தாவுக்கு முகக்கவசமும் அணிவிக்கப்பட்டது!
மணற்சிற்பத்தைச் செய்வதற்கு சுமார் 8 மணி நேரம் எடுத்ததாக NDTV செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை