லா பால்மா தீவில் எரிமலை வெடிப்பு முடிவுக்கு வந்தது!!
ஸ்பானிய அதிகாரிகள் லா பால்மா (La Palma) தீவில் மூன்று மாதமாக நீடித்த எரிமலை வெடிப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
கடந்த 10 நாள்களாக எரிமலையிலிருந்து நெருப்புக் குழம்பு வழிந்தோடவில்லை.
எரிமலை குமுறும் அறிகுறியும் இல்லை.
பெரிய அளவில் நச்சு வாயு வெளியாகவில்லை.
எனினும் எரிமலை வெடிப்பால் தீவில் ஏற்பட்ட நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை.
எரிமலையில் இருந்து வழிந்தோடிய நெருப்புக் கற்களால் சுமார் 3,000 கட்டடங்கள் சேதமடைந்தன.
தீவின் பல பகுதிகளை அடர்த்தியான சாம்பல் படர்ந்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை