யாழ்.வடமராட்சியை சேர்ந்த குடும்பஸ்தர் பிரான்ஸில் தற்கொலை!!
நேற்று முன்தினம் இரவு (06) யாழ்.வடமராட்சி பொலிகண்டி பகுதியைச் சொந்த இடமாக கொண்ட இளம் குடும்பத்தர் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் குடும்பத்துடன் வசித்து வந்த யாழ்.வடமராட்சி பொலிகண்டி பகுதியை சொந்த இடமாக கொண்ட இளம் குடும்பத்தர் விபரீத முடிவை மேற்கொண்டு உயிரிழந்த சம்பவம் புலம்பெயர் தமிழர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் யேசுதாஸ் றூபன் வயது 41 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறான விபரீத முடிவை மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேதிக விசாரணைகளை பிரான்ஸ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இவரின் சீட்டுப் பணத்தை இன்னொருவர் மோசடி செய்ததால் ஏற்பட்ட விரக்தியே தற்கொலைக்கு காரணம் என இவரது மனைவியின் நெருங்கிய உறவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை