திருக்கோயில் துப்பாக்கிசூடு- உயிரை பறிந்த நபரின் தாயார் வெளியிட்ட தகவல்!!
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சக பொலிஸ் உத்தியோகத்தர் வீடு சென்று தனது பெற்றோரை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.
குறித்த தகவலை துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தரின் தாயார் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு குறித்து தனது பெற்றோரிடம் அவர் கூறியதாகவும் அவரது தாய் கூறியுள்ளார்.
துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸாரின் காலில் நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை காரணமாக, அவருக்கு விசேட சலுகைகளுடன் கடமைகளுக்கு சமுகமளிக்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும், கடந்த 8 வருடங்களாக குறித்த உத்தியோகத்தருக்கு காவல் நிலையங்களில் அநீதி இழைக்கப்பட்டது. மகன் கடுமையான மன அழுத்தத்தில் இருந்த நிலையிலேயே, இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது மகன் துப்பாக்கி சூடு நடத்திய பின், தனது சொந்த கப் ரக வாகனத்தில் வீடு திரும்பிய நிலையில், இடைநடுவில் கப் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் தப்பித்து, வீட்டிற்கு வருகை தந்த தனது மகன், பெற்றோரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதாக தாய் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தான் மொனராகலை காவல் நிலையத்தில் சரணடைய போவதாக சந்தேகநபர் பெற்றோரிடம் குறிப்பிட்டுள்ளார். எனினும், மொனராகலை காவல் நிலையத்திற்கு சென்றால், இடைநடுவில் காவல்துறையினரால் இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளது, அதனால் எத்திமலை காவல்நிலையத்தில் சரணடையுமாறும் அவரது தந்தை கூறியுள்ளார்.
இந்நிலையில், தனது மகன் எத்திமலை காவல் நிலையத்திற்கு சென்று, அனைத்து பொருட்களையும் ஒப்படைத்து சரணடைந்துள்ளதாக தாய் தெரிவித்தார். இவ்வாறு சரணடைந்த சந்தேகநபரை, எத்திமலை காவல் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்து, அம்பாறை காவல் நிலைய தலைமையக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
.jpeg
)





கருத்துகள் இல்லை