இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!!

 


இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் பின்வரும் தகுதிகளில் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும். சைவபரிபாலனசபையால் நடாத்தப்படும் சைவசித்தாந்த பிரவேச பால பண்டிதர் பரீட்சையில் சித்தி அல்லது கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை (இந்துசமயம் அல்லது இந்துநாகரீகம் உட்பட) சித்தி அல்லது சைவசமய அறிவு அனுட்டானங்களை அநுட்டித்து வரும் 40 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்க முடியும்.


சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் கீழ்வரும் தகுதிகளில் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் அல்லது இளஞ்சைவப்புலவர் தேர்வு அல்லது சித்தாந்தபண்டிதர் தேர்வு (சைவபரிபாலனசபை) அல்லது பண்டிதர் தேர்வு (ஆரிய திராவிடபாசா விருத்திச்சங்கம்) சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.


விண்ணப்பிக்க விரும்புவர்கள் 100 ரூபா செலுத்தி விதிகள் பாடத்திட்டத்துடன் விண்ணப்பபடிவத்தினை பெற்று பரீட்சை கட்டணமாக 500 ரூபாவினை இலங்கை வங்கியில் அகில இலங்கை சைவப்புலவர்சங்கம் கணக்கு இல 1133272  இற்கு வைப்பிலிட்டு பற்றுச்சீட்டுன்  எதிர்வரும் 20.01.2022 இற்கு முன்பாக சைவப்புலவர் ஏ.அனுசாந்தன் தேர்வுச்செயலாளர்  அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் இல 153 கே.கே.எஸ்.வீதி கொக்குவில் என்னும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைத்தல் வேண்டும். வங்கிப்பற்றுச்சீட்டு விண்ணப்படிவத்துடன் அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பிந்திய விண்ணப்பங்கள் மேலதிக அறவீட்டுக்கட்டணம் 100 ரூபாவுடன் 31.01.2022  வரை ஏற்றுக் கொள்ளப்படும். அதற்குப்பிந்திய விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.


இப் பரீட்சைகள் தொடர்பான மேலதிக விடயங்களினை 0766345136 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும். என அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.

செயலாளர்

சைவப்புலவர் செ.த.குமரன்

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம்

கே.கே.எஸ்.வீதி கொக்குவில்

0779773538


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.